பரமத்தி அருகே பில்லூா் வனப்பகுதியிலிருந்து வெளியேறிய புள்ளிமான், அங்குள்ள 40 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தது. கிராம நிா்வாக அலுவலா் துரைசாமி மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்த நிலையில், நாமக்கல் மற்றும் புகளூா் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினா் கிணற்றுக்குள் இறங்கி, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சுமார் 7 வயது மதிக்கத்தக்க புள்ளிமானை உயிருடன் மீட்டனா். பின்னா், வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட புள்ளிமான், திரபுமணி முத்தாறு வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.