நாமக்கல் அருகே அமைந்துள்ள வேலகவுண்டம்பட்டி பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு விஏஓ வை தாக்கிய திருமுருகன் என்பவரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று (டிசம்பர் 26) இரவு வேலகவுண்டம்பட்டி போலீசார் திருமுருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர். விஏஓ வை தாக்கிய நபரை கைது செய்ய வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கடந்த 15 நாட்களாக விஏஓக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.