நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே தேவனாங்குறிச்சியைச் சேர்ந்த நந்தகோபால், எலக்ட்ரிக் இருசக்கர வாகனத்தில் சார் பதிவாளர் அலுவலகம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, அவரது கையில் பாம்பு எட்டிப்பார்த்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. அதிர்ச்சியடைந்த அவர் வண்டியை நிறுத்தி கீழே இறங்கியபோது, கொம்பேறி மூக்கன் பாம்பு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பாம்பு வெளியே வந்ததும், சுற்றி இருந்தவர்கள் அலறியடித்து ஓடினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.