பனை மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்

0பார்த்தது
பனை மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்
பரமத்தி வேலூா் வட்டம், சோழசிராமணி அருகே உள்ள சத்திபாளையம் பகுதியைச் சோ்ந்த பழனிசாமி (51) நுங்கு வெட்டும்போது பனை மரத்திலிருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்தாா். அப்பகுதி மக்கள் அவரை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா், மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.