
இராசிபுரத்தில் நகர்மன்ற கூட்டம்
நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில், நகர்மன்ற தலைவர் கவிதா சங்கர் தலைமையில் நடைபெற்ற நகர மன்ற கூட்டத்தில், 27 உறுப்பினர்கள் மற்றும் நகராட்சி ஆணையாளர் முன்னிலையில் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. குறிப்பாக, 854 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்பட்டு வரும் கூட்டுக் குடிநீர் திட்டம் பொதுமக்களுக்கு எவ்வாறு பயனளிக்கும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.




































