நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அடுத்த குருசாமிபாளையத்தில் உள்ள அரசு உதவிபெறும் மகளிர் உயர்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு மாணவர்கள் பொது தேர்வில் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் மாணவர்களைப் பாராட்டினர். திவ்யா 496, ஆத்மசாதகி 489, நிவேதா 485 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பிடித்தனர்.