இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இராசிபுரம் நகரம், ஒன்றியக் குழு சார்பில் மறைந்த மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணுவின் மறைவிற்கு மெளன ஊர்வலம் மற்றும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இராசிபுரம் நகர இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் எஸ். மணிமாறன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பல்வேறு கட்சியினர் பங்கேற்று ஆர். நல்லகண்ணு உருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். முன்னதாக ராசிபுரம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக மௌன ஊர்வலம் நடைபெற்றது. பழைய பேருந்து நிலையம் முன்பு வைக்கப்பட்டிருந்த நல்லகண்ணு உருவப்படத்துக்கு அனைவரும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.