நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அடுத்த ஆர். பட்டணம் பகுதியில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில், அக்கட்சியின் கொள்கைத் தலைவர்களுள் ஒருவரான, அஞ்சலை அம்மாளின் பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில், அஞ்சலை அம்மாளின் திருவுருவப் படத்திற்கு மாலைகள் அணிவிக்கப்பட்டு, மலர்கள் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.