சென்னை, தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ரூ. 34.12 கோடி மதிப்பீட்டில் போதமலையில் 9.90 கி.மீ நீளத்திற்கு அமைக்கப்பட்ட சாலைப் பணியை காணொளி காட்சி வாயிலாக மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து, ஆர். புதுப்பட்டி கெடமலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எம்பி ராஜேஷ்குமார் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மதிவேந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.