நாமக்கல் மாவட்டத்தில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இராசிபுரம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் மாலை சுமார் 5.30 மணியளவில் லேசான சாரல் மழை பெய்தது. கடந்த சில தினங்களாகவே நாமக்கல் மாவட்டத்தில் ஒரு சில நேரங்களில் கன மழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.