நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் சட்டமன்ற தொகுதியில், நாமகிரிப்பேட்டை ஒன்றியம் மூலபள்ளிப்பட்டி ஊராட்சி குரங்காத்துபள்ளம் கிராமத்தில் ரூ. 30.00 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயக் கூடம், ரூ. 54.45 லட்சம் மதிப்பீட்டில் தார்ச்சாலையாக தரம் உயர்த்துதல், ரூ. 20.00 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் குழாய் இணைப்புடன் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, ரூ. 66.93 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணிகளுக்கு அமைச்சர் மதிவேந்தன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இந்த திட்டங்கள் மொத்தம் ரூ. 1.71 கோடி மதிப்பீட்டில் நடைபெறுகின்றன.