கூனவேலம்பட்டி தவெக சார்பாக அங்கன்வாடிக்கு மின்விசிறி வழங்கல்

72பார்த்தது
கூனவேலம்பட்டி தவெக சார்பாக அங்கன்வாடிக்கு மின்விசிறி வழங்கல்
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் கூனவேலம்பட்டி ஊராட்சி, பாலப்பாளையம் பாவடி பகுதியில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தில் நீண்ட நாட்களாக மின்விசிறி இல்லாமல் குழந்தைகள் அவதிப்பட்டு வந்தனர். இதனை தொடர்ந்து இன்று 02.06.2025 தமிழக வெற்றிக் கழக சார்பாக நிர்வாகிகள் முருகேசன், மதன்குமார் அவர்களின் ஏற்பாட்டில், இராசிபுரம் மேற்கு ஒன்றிய நிர்வாகி வேலுபிரபாகரன் முன்னிலையில் மின்விசிறி அங்கன்வாடி அலுவலர்கள் மற்றும் குழந்தைகளிடம் வழங்கப்பட்டது. இதில் தவெக நிர்வாகிகள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Job Suitcase

Jobs near you