நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள அத்தனூர் பேரூரில் மே 28 அன்று உலக பட்டினி தினத்தை முன்னிட்டு, தமிழக வெற்றி கழகம் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பேரூர் கழகச் செயலாளர் ஜே. கோகுல் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பொதுமக்கள் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர். நிர்வாகிகள், தொண்டர்கள், உறுப்பினர்கள் எனப் பலர் இதில் பங்கேற்றனர்.