நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாமகிரிப்பேட்டை, புதுப்பட்டி, வெண்ணந்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 196 நபர்களுக்கு தமிழக அரசின் இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி இராசிபுரம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வட்டாட்சியர் சசிகுமார் தலைமை வகித்தார். அமைச்சர் மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார் எம்பி ஆகியோர் கலந்து கொண்டு பட்டா வழங்கினார்கள். கட்சி நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.