நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அருகே, தூத்துக்குடியிலிருந்து பெங்களூரு நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 5 பயணிகள் லேசான காயமடைந்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.