நாமகிரிப்பேட்டையில் மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி

3பார்த்தது
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட மங்களாபுரம் தாண்டாகவுண்டன் பாளையம் பகுதியில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. போட்டியை எம்பி ராஜேஷ் குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்போட்டியில் சேலம், நாமக்கல், திருச்சி, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுமார் 750க்கும் மேற்பட்ட காளைகளும், 400க்கும் மேற்பட்ட வீரர்களும் கலந்து கொண்டனர். மாடுபிடி வீரர்களுடன் உறுதிமொழி ஏற்ற பிறகே போட்டி துவக்கப்பட்டது.