நாமக்கல்: ரூ.18 லட்சத்தில் புதிய அங்கன்வாடி கட்டிடம் திறப்பு

687பார்த்தது
நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில் உள்ள பாரதிதாசன் சாலை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் 2025-26 கல்வி நிதி திட்டத்தின் கீழ் ரூ. 18 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையம் கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் நகராட்சி ஆணையாளர் நிவேதிதா மற்றும் நகர்மன்ற தலைவர் கவிதா சங்கர் தலைமை வகித்தனர். மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஸ்குமார் அங்கன்வாடி மைய கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி