நாமக்கல் மாவட்டத்தில் நேற்று (மே 24) காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், பிள்ளாநல்லூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு சுமார் 7 மணியளவில் கனமழை பெய்தது. இந்த திடீர் மழையால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. எனினும், மழையால் அப்பகுதியில் வெப்பம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.