ராசிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் சட்டவிரோதமாக மண் கடத்தப்படுவதாக வந்த புகாரை அடுத்து, தாசில்தார் சசிகுமார் நேற்று அதிகாலை உடையார்பாளையம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, முறையான அனுமதி இன்றி மண் ஏற்றிச் சென்ற டிப்பர் லாரியை மண்ணுடன் பறிமுதல் செய்தார். லாரி உரிமையாளர் மற்றும் ஓட்டுநர் குறித்து வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.