ராசிபுரத்தில் தனியார் பள்ளி வாகனங்களின் இயக்குத் திறன் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து
போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில், ராசிபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் எம். விஜயகுமார், வட்டார
போக்குவரத்து அலுவலர் பதுவைநாதன், மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வகுமார், மாவட்டக் கல்வி அலுவலர் சித்ரா ஆகியோர் பங்கேற்றனர்.
போக்குவரத்து விதிமுறைகளுக்கு உட்பட்டு 32 பள்ளிகளைச் சேர்ந்த 280 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் 26 வாகனங்களில் பல்வேறு குறைபாடுகள் கண்டறியப்பட்டன.