ராசிபுரம் அருகே பூசாரிபாளையம் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் (32), அவரது மனைவி ராஜேஸ்வரி (32) ஆகியோர், பிப்.6 அன்று காக்காவேரி பகுதியில் உள்ள வங்கியில் அடகு வைத்திருந்த 9 பவுன் நகையை மீட்டு டூவீலரின் பெட்டியில் வைத்துக்கொண்டு வீடு திரும்பினர். இதனை நோட்டமிட்டு அவர்களைப் பின்தொடர்ந்து வந்தவர்கள் நகையை திருடிச் சென்றனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், சிசிடிவி காட்சி அடிப்படையில் குற்றவாளிகளான சூர்யா, ரமேஷ் ஆகிய இருவரை நேற்று கைது செய்தனர்.