கூனவேலம்பட்டி: சாலை தரம் உயர்த்தும் பணி தொடக்கம்

1பார்த்தது
கூனவேலம்பட்டி: சாலை தரம் உயர்த்தும் பணி தொடக்கம்
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அடுத்த கூனவேலம்பட்டி கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய சாலைகளை இதர மாவட்ட சாலைகளாக தரம் உயர்த்தும் பணி ரூ. 99.29 இலட்சம் மதிப்பீட்டில் இன்று அமைச்சர் மதிவேந்தன் மற்றும் எம்பி ராஜேஷ்குமார் ஆகியோரால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர் ஜெகநாதன், மாவட்ட பொருளாளர் பாலச்சந்தர், சரவணன் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி