2021ல் முதல் முறை சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் பணியாற்றும் வாய்ப்பை வழங்கிய இராசிபுரம் தொகுதி மக்களுக்கு தனது மனமார்ந்த நன்றியை மதிவேந்தன் தெரிவித்துள்ளார். திராவிட மாடல் ஆட்சியின் ஐந்து ஆண்டுகளில், இராசிபுரம் தொகுதி மக்களுக்காக கூட்டுக்குடிநீர் திட்டம், மாவட்ட தலைமை மருத்துவமனை, தகவல் தொழில்நுட்ப பூங்கா, புறநகர் பேரூந்து நிலையம், விளையாட்டு அரங்கம், போதமலைச் சாலை போன்ற எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அவர் சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இவை அனைத்தும் மக்களுக்கு நன்மை பயக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.