நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை பேரூரில் மறைந்த 36 திமுக உறுப்பினர்களுக்கு எம்பி ராஜேஷ்குமார் அஞ்சலி செலுத்தினார். மேலும், அவர்களது குடும்பத்தினருக்கு கலைஞர் குடும்ப நல நிதியை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பேரூர் கழக செயலாளர் அன்பழகன், பேரூராட்சி தலைவர் சேரன், சார்பு அணி அமைப்பாளர்கள் பொன். சித்தார்த், திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.