நாமகிரிப்பேட்டை அருகே சின்னஅரியாகவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளர்கள் கே. பரமசிவம் - நந்தினி தம்பதியினரின் 5 வயது மகன் ரித்விக், செவ்வாய்க்கிழமை வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்தபோது காணாமல் போனான். தேடியும் கிடைக்காததால், அருகில் இருந்த கிணற்றில் தவறி விழுந்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. ராசிபுரம் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் கிணற்றில் தேடியதில், குழந்தை நீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது.