நாமக்கல்: லஞ்சம் வாங்கிய ஊழியர்கள் கைது

0பார்த்தது
நாமக்கல்: லஞ்சம் வாங்கிய ஊழியர்கள் கைது
நாமக்கல் மாநகராட்சி அலுவலகத்தில், புதிதாகக் கட்டிய வீட்டிற்கு வரி விதிப்புச் செய்வதற்காக விண்ணப்பித்திருந்த பூபதி என்பவரிடம், வருவாய் உதவியாளர் உதயகுமார் ₹15,000 லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத பூபதி, லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகார் அளித்தார். போலீஸாரின் அறிவுறுத்தலின்படி, ரசாயனம் தடவிய ₹8,000 பணத்தை பூபதி உதயகுமாரிடம் கொடுத்தபோது, கலா என்ற தற்காலிக தூய்மைப் பணியாளர் மூலம் அவர் பணத்தைப் பெற்றுள்ளார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் உதயகுமார், கலா இருவரையும் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி