ஆயில்பட்டி அருகே நா. காட்டூர் கிராமத்தில் விவசாயி சுப்ரமணியின் மாட்டு கொட்டகையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. அதிகாலை சுமார் 4 மணியளவில் ஏற்பட்ட இந்த விபத்தில், கொட்டகையில் கட்டி வைக்கப்பட்டிருந்த 10 மாடுகளில் 6 மாடுகள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தன. மாடுகள் கத்தும் சத்தம் கேட்டு வந்த விவசாயி சுப்ரமணி அதிர்ச்சியடைந்தார். உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.