நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அடுத்த வடுகம் ஊராட்சிக்கு உட்பட்ட போதமலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள பாலி என்று அழைக்கப்படும் குட்டையில், அடையாளம் தெரியாத இளைஞர் சடலத்தை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
இதனைத் தொடர்ந்து வனத்துறை கட்டுப்பாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ள பகுதிக்கு இவர் எப்படி வந்தார், இறந்ததின் காரணம் என்ன? என்பது குறித்து ராசிபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.