ராசிபுரத்தில் குடிநீர் தட்டுப்பாடு மாவட்ட ஆட்சியரிடம் மனு

67பார்த்தது
ராசிபுரத்தில் குடிநீர் தட்டுப்பாடு மாவட்ட ஆட்சியரிடம் மனு
ராசிபுரம் அணைப்பாளையத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாக, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் வசிப்பவர்கள் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர். அதன் விவரம்: அணைப்பாளையத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திற்குச் சொந்தமான அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இங்கு 208 குடும்பங்கள் வசித்து வருகின்றன. 

கடந்த சில மாதங்களாக குடிநீர் பஞ்சம் நிலவுகிறது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்திற்கு திங்கள்கிழமை வந்த குடியிருப்புவாசிகள் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து குடிநீர் தடையின்றி வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மனு அளித்தனர்.