இராசிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

80பார்த்தது
இராசிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (மே. 20) புதன்கிழமை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இராசிபுரம், காக்காவேரி, புதுப்பாளையம், பட்டணம், வடுகம், வெள்ளாளப்பட்டி, சிங்காளந்தபுரம், ஜேடர்பாளையம், ஆண்டகளூர்கேட், குருசாமிபாளையம், நத்தமேடு, மசக்காளிப்பட்டி, அத்தனூர், அலவாய்ப்பட்டி ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி