நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே முள்ளுக்குறிச்சி பகுதியில் உள்ள சுவாமி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில், 11ஆம் வகுப்பு மாணவன் ஜீவனை பள்ளி தாளாளர் பூர்ணிமா தனபால் மகன் நவீன் கடுமையாகத் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த மாணவன் மயக்கமடைந்த நிலையில், சக மாணவர்களால் மீட்கப்பட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து அறிந்த மாணவனின் உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.