நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அருகே வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை முடக்கும் பாஜக அரசையும், அதிமுகவையும் கண்டித்தும், கல்விக்கு நிதி வழங்காததை எதிர்த்தும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் பாலச்சந்தர் மற்றும் ஒன்றிய செயலாளர் துரைசாமி தலைமையில் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.