நாமக்கல் மாவட்டம் இராசிரத்தில் உள்ள கூட்டுறவு பட்டுக்கூடு விற்பனை நிலையத்தில் இன்று (நவ. 06) 665 கிலோ பட்டுக்கூடு விற்பனைக்கு வந்தது. இதில் அதிகபட்சமாக கிலோ ரூ. 731க்கும், குறைந்தபட்சமாக ரூ. 520க்கும், சராசரியாக ரூ. 641க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ. 4 லட்சத்து 26 ஆயிரத்து 626-க்கு பட்டுக்கூடுகள் விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.