நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று (மே 24) இரவு பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் பல இடங்களில் மழைநீர் தேங்கியது. ராசிபுரம் பகுதியில் கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் ஒரு பெண் உயிரிழந்தார், மேலும் இருவர் காயமடைந்தனர். சூறைக்காற்று காரணமாக ஆம்னி கார் மீது வேப்பமரம் சாய்ந்து சேதமடைந்தது. தொடர்ந்து சித்தி விநாயகர் கோவில் அருகே அரசமரம் வேரோடு விழுந்ததால் அப்பகுதியில் நீண்ட நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.