இராசிபுரம்: போக்குவரத்து நெரிசல் குறித்து ஆலோசனை

1பார்த்தது
நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில் முக்கிய சாலைகளில் நிலவும் போக்குவரத்து நெரிசல் தொடர்பாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர். இதன் காரணமாக, கடந்த வாரம் அமைச்சர் எல். லோகேஷ் தமிழ்ச்செல்வன் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விமலா இராசிபுரம் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் ஆலோசனைகளை நடத்தி வருகிறார்.