ராசிபுரம்: ஏடிஎம் மையத்தில் மூதாட்டியிடம் ரூ.30 ஆயிரம் மோசடி

68பார்த்தது
ராசிபுரம்: ஏடிஎம் மையத்தில் மூதாட்டியிடம் ரூ.30 ஆயிரம் மோசடி
ராசிபுரத்தை அடுத்த குருசாமிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் மனோரஞ்சிதம் (68). துணை வட்டார வளா்ச்சி அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவா். இவா் திருமணமாகாதவா்.

இவா் தனது ஒய்வூதியப் பணத்தை எடுப்பதற்காக ராசிபுரத்தில் உள்ள ஒரு வங்கி ஏடிஎம் மையத்திற்கு வெள்ளிக்கிழமை வந்துள்ளாா். அப்போது அருகில் இருந்த சுமாா் 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத இளைஞரிடம் பின் நம்பரை கொடுத்து பணத்தை எடுக்கக் கூறியுள்ளாா். அடையாளம் தெரியாத அந்த நபா் பணம் வரவில்லை எனக் கூறி, தான் ஏற்கெனவே வைத்திருந்த போலியான ஏடிஎம் காா்டை அவரிடம் கொடுத்தவிட்டு, மனோரஞ்சிதத்துக்கு சொந்தமான காா்டைப் பயன்படுத்தி ரூ.30 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டாா்.

இதனை குறுஞ்செய்தி மூலம் அறிந்த மனோரஞ்சிதம் தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்து வங்கிக்கு சென்று தனது கணக்கை முடக்கினாா். இதுகுறித்து ராசிபுரம் காவல் நிலையத்தில் அவா் புகாா் அளித்தாா். இந்தப் புகாரின் அடிப்படையில், வங்கி சிசிடிவி கேமராவை போலீஸாா் ஆய்வு மா்ம நபரைத் தேடி வருகின்றனா்.