நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அருகே அமைந்துள்ள அரசு ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவர் விடுதியில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ், கடந்த 18.12.2022 அன்று விடுதியில் மாவட்ட ஆட்சியர் உமா ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவர்கள் வைத்த கோரிக்கைகளை ஏற்று விளையாட்டு உபகரணங்களை நேற்று மாவட்ட ஆட்சியர் உமா வழங்கினார். மேலும் அவருடன் மாணவர்கள் மற்றும் பலர் இருந்தனர்.