இராசிபுரம்: கல்லூரி பேருந்து கவிழ்ந்து விபத்து

5பார்த்தது
இராசிபுரம்: கல்லூரி பேருந்து கவிழ்ந்து விபத்து
நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில் உள்ள காக்காவேரி அருகே தனியார் பாலிடெக்னிக் கல்லூரி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 25க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படுகாயம் அடைந்தனர். காயமடைந்த மாணவர்கள் சிகிச்சைக்காக ராசிபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்புக்கும் வழிவகுத்தது.

தொடர்புடைய செய்தி