இராசிபுரம்: ரூ. 3 லட்சம் ரொக்கம் திருடிய தந்தை, மகன் கைது

62பார்த்தது
இராசிபுரம்: ரூ. 3 லட்சம் ரொக்கம் திருடிய தந்தை, மகன் கைது
நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் அருகேயுள்ள அனந்தகவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மணமகளுக்கும், ராசிபுரம் நகரைச் சேர்ந்த மணமகனுக்கும் ராசிபுரம் நீதிமன்றம் அருகேயுள்ள திருமண மண்டபத்தில் கடந்த ஜூன் 6 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இதில் மணப்பெண் வீட்டாருக்குச் சொந்தமான 26 பவுன் நகை, ரூ. 3 லட்சம் ரொக்கம் மணப்பெண் அறையின் பீரோவில் வைக்கப்பட்டிருந்தது. திருமணம் முடிந்து பீரோவை திறந்தபோது அதிலிருந்து நகை, ரொக்கம் திருடப்பட்டது தெரியவந்தது. 

இதனால் அதிர்ச்சியடைந்த மணமகளின் தந்தை ராஜவேலு ராசிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். நாமக்கல் எஸ்.பி. ராஜேஷ்கண்ணன் உத்தரவின்பேரில் ராசிபுரம் டிஎஸ்பி விஜயகுமார், உதவி ஆய்வாளர்கள் சுரேஷ்குமார், சிவா, பி. கீதாலட்சுமி ஆகியோர் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு விசாரணை நடத்தினர். 

இதில் நகை, ரொக்கத்தை திருடியது கரூர் மாவட்டம், நரசிம்மபுரம் தெற்குப் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் (55), அவரது மகன் பாலிடெக்னிக் படித்துள்ள ஹரிகிருஷ்ணன் (19) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த நகை, ரொக்கத்தை பறிமுதல் செய்து இருவரையும் ராசிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி