இராசிபுரம் ரூ. 854 கோடி மதிப்பில் கூட்டு குடிநீர் தொடக்கம்

2பார்த்தது
இராசிபுரம் ரூ. 854 கோடி மதிப்பில் கூட்டு குடிநீர் தொடக்கம்
சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று (05. 02. 2026) தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின், இராசிபுரம் நகராட்சி, நாமகிரிப்பேட்டை, வெண்ணந்தூர் புதுச்சத்திரம் ஒன்றியம் மற்றும் நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளி, புதுப்பட்டி, அத்தனூர், வெண்ணந்தூர், பட்டணம், பிள்ளாநல்லூர், மல்லசமுத்திரம் பேரூராட்சிகளுக்கு ரூ. 854 கோடி மதிப்பீட்டில் 523 ஊரக குடியிருப்பு பகுதிகளுக்கு இராசிபுரம் கூட்டு குடிநீர் திட்டத்தை காணொளி காட்சி வாயிலாக மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்த திட்டம் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டுள்ளது.