இராசிபுரம் ரயில் நிலையம் அருகே உள்ள நீர்த்தேங்கிய பகுதியில் வளர்ந்துள்ள கருவேல மரங்களில் புதன்கிழமை மாலை ஏராளமான பறவைகள் கூட்டம் கூட்டமாக வந்து அமர்ந்தன. இந்தப் காட்சி, வெள்ளைப் போர்வை போர்த்தியது போல காணப்பட்டது. இதை அப்பகுதியில் சென்றவர்கள் கண்டு ரசித்து, படம்பிடித்துச் சென்றனர். நீர்நிலைகளின் நடுவே மரத்தில் பறவைகள் பனி படர்ந்தது போல அமர்ந்திருந்த காட்சியை வேடிக்கை பார்க்க கூட்டம் கூடியதால், அப்பகுதி சுற்றுலாத் தலம் போல காட்சியளித்தது.