நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அருகே தேங்காய்பாளையத்தைச் சேர்ந்த ரகுபிரசாத், திருமண நிகழ்ச்சியில் லோகு சூர்யாவைக் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த லோகு
சூர்யா, ரகுபிரசாத்தைத் தாக்கி அவரது இருசக்கர வாகனத்திற்கு தீ வைத்தார். இந்தச் சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதைத் தொடர்ந்து, இராசிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த லோகு சூர்யாவைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.