நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் அமைச்சர் மா. மதிவேந்தன் கடந்த சில தினங்களாக மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக, இராசிபுரத்தில் உள்ள 18-வது வார்டில் நடைபெற்ற "வீதிதோறும் சட்டமன்ற உறுப்பினர் குறைகேட்பு" கூட்டத்தில் பங்கேற்றார். பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்ற அமைச்சர், அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.