இராசிபுரம் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி

252பார்த்தது
இராசிபுரம் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் ஸ்ரீநித்திய சுமங்கலி மாரியம்மன் கோயில் முன்பாக சாலைப் பாதுகாப்பு பேரணி நடைபெற்றது. ஜேசிஐ ராசிபுரம் மெட்ரோ தலைவா் என். சதீஷ்குமாா் தலைமை வகித்த இந்த பேரணியில், ஜேசிஐ மண்டலம் -29 தலைவா் பிரசாந்த் மௌரியா கௌரவ விருந்தினராகப் பங்கேற்றாா். ராசிபுரம் காவல் நிலைய ஆய்வாளா் கே. செல்வராஜன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று விழிப்புணா்வுப் பேரணியைத் தொடங்கிவைத்தாா். இந்தப் பேரணி பழைய பேருந்து நிலையம், கடைவீதி, புதிய பேருந்து நிலையம் வழியாக அண்ணா சாலை அரசு மேல்நிலைப்பள்ளியை வந்தடைந்தது.

தொடர்புடைய செய்தி