இராசிபுரம் ஒன்றியம், அணைகட்டிபாளையம் அரசு பட்டுக்கூடு அங்காடி வளாகம் ரூ. 2.20 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. மேலும், ரூ. 50 லட்சம் மதிப்பில் பலமுனை பட்டு நூற்பகம் மற்றும் பட்டு முறுக்கேற்றும் மைய கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், 142 பட்டு விவசாயிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை எம்பி ராஜேஷ்குமார், பட்டு வளர்ச்சி துறை இணை இயக்குநர் பொன்மாரி மற்றும் பலர் கலந்து கொண்டு வழங்கினர்.