நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோவிலில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு ஆறு கால பூஜை நடைபெற்றது. இதில் ஸ்ரீ கைலாசநாதர் சுவாமிக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரங்கள் செய்யப்பட்டு மஹா தீபாராதனை காட்டப்பட்டது. சிவராத்திரியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கோவிலை சுற்றி வலம் வந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.