இராசிபுரம்: நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை

379பார்த்தது
இராசிபுரம்: நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை
நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் ஐப்பசி திருத்தேர் பெருவிழா முன்னிட்டு தினந்தோறும் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இன்று இருபதாம் நாள் நிகழ்ச்சியாக, உப்பிலிய நாயக்கர் சமூகத்தினர் சார்பில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் இதில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.