குடிமக்கள் நலன் காக்க கல்குவாரி உரிமம் ரத்து செய்ய கோரிக்கை

705பார்த்தது
குடிமக்கள் நலன் காக்க கல்குவாரி உரிமம் ரத்து செய்ய கோரிக்கை
நாமக்கல் மாவட்டம், அக்கலாம்பட்டி கிராமத்தில் புதிய கல்குவாரி அமைக்கப்பட்டுள்ளது. இது குடியிருப்பு பகுதிக்கு மிக அருகில் உள்ளதால், மக்கள் நலனை கருதி கல்குவாரி உரிமத்தை ரத்து செய்ய கோரி, இளம் விவசாயிகள் சங்கம் மற்றும் பொதுமக்கள் சார்பில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ் அவர்களிடம் மே 24 அன்று மனு அளிக்கப்பட்டுள்ளது. கல்குவாரி உரிமம் பெறுவதில் போலியான தகவல்கள் மற்றும் தவறான ஆவணங்கள் பயன்படுத்தப்பட்டதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி