நாமகிரிப்பேட்டை அருகே உள்ள மெட்டலா புகழ்பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் மாசி மாதம் அமாவாசையை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்காரங்கள் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து நாமகிரிப்பேட்டை, ராசிபுரம், மங்களபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர்.