பொன்குறிச்சியில் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம்

2பார்த்தது
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொன்குறிச்சி ஊராட்சியில் இன்று (நவ. 07) சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் (MGNREGS) 2024-25 ஆம் ஆண்டுக்கான தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. 100 நாள் வேலை முறையாக வழங்கப்பட்டதா, வேலை செய்தவர்களுக்கு பணம் சரியாக சென்றடைந்துள்ளதா போன்ற ஆய்வுகள் நடத்தப்பட்டன. இக்கூட்டத்தில் அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி